தேர்தல் கூட்டணி குறித்து, கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தையை துவக்கவில்லை என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் பொங்கல் விழாவையொட்டி, திமுக தொண்டர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கட்சிகள் கூட்டணியில் சேருவது தொடர்பாக இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றார்.
தமிழில் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் இப்போது, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டுவதாக குற்றஞ்சாட்டினார்.