எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வராததால் பொங்கல் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் வழக்கமான பேருந்துகள் 4,100 டன் சேர்த்து, 1,660 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
நேற்று வரை 2,216 சிறப்பு பேருந்துகள் அறிக்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாததால் 1660 பேருந்துகளே இயக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.