செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

யூடியூப்பில் 200 ஆபாச வீடியோக்கள்!- சிக்கியவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

Jan 13, 2021 10:09:31 AM

சென்னையில் இளம் பெண்களிடத்தில் ஆபாசமாக பேசி பேட்டி எடுக்க முயன்ற 3 யூடியூப்பர்களுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் பெண்களிடத்தில் ஆபாசமாக பேசி வீடியோ எடுத்து வெளியிட்டு வருவதாக ஏற்கனவே புகார்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில், பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்களிடத்தில் ஆபாசமாக பேசி பேட்டி எடுக்க முயன்ற போது, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆசென்பாட்சா (வயது 23) , கேமராமேன் அஜய்பாபு (24) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ் (31) என்பவரும் கைதானார். பின்னர், போரூரில் உள்ள ‘சென்னை டாக்’ யூடியூப் சேனல் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த அலுவலகத்தில் இளம் பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

போலீசார் நடத்திய சோதனையில் பெண்களுக்கு எதிரான ஆபாச வீடியோக்கள் அடங்கிய கணினி, லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சேனல் நிறுவனத்தை மூடி சீல் வைத்துள்ளனர். சென்னை டாக்ஸ் சேனலில் இதுவரை 200 வீடியோ வெளியிடப்பட்டதாகவும் இது வரை 7 கோடி பார்வையாளர்களை இந்த வீடியோக்களை பார்த்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை தமிழக மக்கள் தொகைக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வீடியோவை 10 லட்சம் பேர் பார்த்தால் தலா ரூ.30,000 முதல் 40,000 வரை வருமானம் யூடியூப் சேனலில் இருந்து கிடைக்குமாம். மற்றபடி, விளம்பர வருமானம் தனி. தற்போது வரை சென்னை டாக்ஸ் சேனல் முடக்கப்படவில்லை. இந்த சேனலை முடக்குவதற்கான நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கைதானவர்கள் மீது சாஸ்திரி நகர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 294(பி) ஆபாசமாக பேசுதல், 354(பி),பெண்களை பின் தொடர்ந்து தொந்தரவு செய்தல், 509 பெண்ணை பொது இடங்களில் அவமானம் படுத்தும் வகையில் கேள்விகள் கேட்பது, 506(2) மிரட்டுதல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடுமையான இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் தண்டனையும் கடுமையாக இருக்கும் என்றே சொல்கிறார்கள். நீதிமன்றத்தில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 3 பேருக்கும் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.


Advertisement
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்
நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement