கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை தொடர்ந்து கண்காணித்து, 2ஆவது முறை தடுப்பூசி போடப்படும் என, தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இருந்து 45 சுகாதார மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை அனுப்பிவைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ள 4 லட்சத்து 39 ஆயிரத்து 500 பேர் பதிவு செய்துள்ளனர் என்றார். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்ய, வருகிற ஜனவரி 25ஆம் தேதி வரை, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.