மிளகு, பூண்டு, சுக்கு போன்ற பொருள்கள் அனைத்தையும் சேர்த்து ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரோனா வைரஸ் செத்து விடும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்து பேசிய அமைச்சர், சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்ற பழமொழியை சுட்டிக்காட்டினார்.