பெரம்பலூரில் 2 பெண் குழந்தைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தாயிடம் இருந்து, சாதுர்யமாக தனது 2 வயது தங்கையை காப்பாற்றி, 10 வயது சிறுமி தாமும் தப்பித்திருக்கிறார்.
எளம்பலூரைச் சேர்ந்த குமார் - மஹாலட்சுமி தம்பதிக்கு 10 வயதில் ஜெயஸ்ரீ என்ற குழந்தையும் 2 வயதில் மோனிகா என்ற குழந்தையும் உள்ளனர்.
காலை குமார் பணி நிமித்தமாக திருச்சி சென்ற நிலையில், வீட்டிலிருந்த மகாலட்சுமி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 2 குழந்தைகளை வலுக்கட்டாயமாக சமையலறைக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் தன் மீதும் 2 குழந்தைகள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றி பற்றவைக்க முயன்றுள்ளார். விபரீதத்தை உணர்ந்த ஜெயஸ்ரீ, தங்கை மோனிக்காவை தாயிடமிருந்து காப்பாற்றி இழுத்துச் சென்று பக்கத்து அறைக்குள் நுழைந்துகொண்டதாகக் கூறுகிறாள்.
குழந்தைகள் தப்பிய நிலையில், உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கான காரணம் என்னவென்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.