பா.ம.க. நிறுவனர் ராமதாசை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த ஆலோசனையில், வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு, சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.