பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
தினசரி இயக்கக்கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என, மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, சென்னையிலிருந்து வெவ்வேறு ஊர்களுக்குச் செல்ல 13-ம் தேதி வரை 16 ஆயிரத்து 221 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய சுமார் 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலைத் தடுக்க கோயம்பேடு மட்டுமின்றி கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலையம, பூந்தமல்லி , மாதவரம் ஆகிய தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்தும் வெளியூர்ப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாநகரப் போக்குவரத்து சார்பில் பேருந்து நிலையங்களுக்கு இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.