நடிகருக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என பலர் கூறுவதை மக்கள் தான் உண்மை இல்லை என நிரூபிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை மசகாளிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், தமிழகம் மாற்றத்திற்கு தயாராகிவிட்டதை கண்கூடாக பார்ப்பதாக தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும், வீட்டுக்கொரு கணினி வழங்கப்படும் வேலைவாய்ப்பின்மையை தடுக்க, திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் எனவும் கமல்ஹாசன் உறுதியளித்தார்.