பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
வடமாநிலங்களைத் தொடர்ந்து கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் முட்டைகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.
முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை குறைந்ததன் விளைவாக, கோழிப்பணைகளில் முட்டைகள் தேக்கமடைந்து விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்லில் கடந்த 4 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 50 காசுகள் வரை குறைந்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.