மதுரை அலங்காநல்லூரில் வருகிற 16-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கால்கோள் நடும் நிகழ்ச்சி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் காரும், சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் காரும் பரிசாக வழங்கப்படும் என்றார்.
ஜல்லிகட்டில் வெற்றிபெறும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதனிடையே, அவனியாபுரத்தில் 430 வீரர்கள், அலங்காநல்லூரில் 655 வீரர்கள், பாலமேட்டில் 651வீரர்கள் என போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது.