அரியலூர் அருகே மீன்சுருட்டியில் கஞ்சாவை டோர் டெலிவரி செய்த வாலிபர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகமாகியுள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போலீசாஅருக்கு மீன்சுருட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அந்த பகுதியில் தீவிரமாகக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி மெயின் ரோட்டில் நின்றுகொண்டிருந்தார். அவரை அழைத்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். அவரிடத்திலிருந்த இருந்த பையை வாங்கி போலீசார் சோதனை செய்த போது அதில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்த போது, அந்த நபர் அரியலூர் மாவட்டம், மேலணிக்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பதும் தேனி மாவட்டம் போடிமெட்டு பகுதியிலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சா கஸ்டமர்களிடம் டோர் டெலிவரி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, ஜெயபிரகாஷிடம் இருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் அவரைக் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.