தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையை ஒட்டிய வங்க கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாளை ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.