கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து கோழி, வாத்து மற்றும் முட்டைகள் தமிழகத்திற்கு கொண்டு வர அரசு தடை விதித்துள்ளது.
கேரள மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ள நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும்
கன்னியாகுமரி மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
26 தற்காலிக சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு குழுக்கள் மூலம் கேரளாவிலிருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள் மற்றும் அதன் முட்டைகள் மற்றும் கோழியினம் சார்ந்த பொருட்கள் அனைத்தும் தமிழக எல்லைக்குள் நுழையா வண்ணம் தடை செய்து திருப்பி அனுப்பப்படுவதாக அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.