தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மையம் விடுத்துள்ள அறிக்கையில், வருகிற 10 ஆம் தேதி அன்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழையும்,தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 ஆம் தேதி அன்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமெனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.