தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒரு கணினி வழங்கப்படும் என்று மக்கள் நீதி மையம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், காட்பாடி, அணைகட்டு போன்ற பகுதிகளில் வேன்மூலம் பிரச்சாரம் மேற்க்கொண்டார். காட்பாடியில் கொட்டும் மழையிலும் நனைந்தபடி இருந்த மக்கள் மத்தியில் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பேசுகையில், மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சியை பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் கூட இப்போது வியந்துபோய் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.