தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை தலைவர் டாக்டர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குறைந்த காற்றோட்டம் கொண்ட உட்புறங்களில் அதிக நேரம் செலவிடுதல், கூட்டமாக கூச்சலிடுதல், சரியான வகையில் முகக்கவசம் அணியாதிருத்தல் போன்ற காரணங்களால் தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.