நாட்டு பசுக்களின் நலன் சார்ந்த அறிவியல் தொடர்பாக தேசிய ஆன்லைன் தேர்வு, பிப்ரவரி 25 ஆம் தேதி நடத்தப்படும் என்று தேசிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா அறிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என யார் வேண்டும் என்றாலும் இத்தேர்வை கட்டணமின்றி எழுதலாம் என்றும், சிறந்த முறையில் பதில் அளிப்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
நாட்டுப் பசுமாடுகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பால் வற்றிய பிறகும் கூட பசு மாடு வளர்ப்பில் இருக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்து அறியும் விதத்தில் தேர்வு நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கான பாடத்திட்டம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.