சி மற்றும் டி பிரிவு அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் போனசாக 3 ஆயிரம் ரூபாய் அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு சிறப்பு தற்காலிக போனசாக ஆயிரம் ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.