தமிழகம் முழுவதும் துணை ஆட்சியர், டி.எஸ்.பி., தீயணைப்பு அலுவலர், வணிகவரித்துறை உதவி ஆணையர் என காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கான குரூப் - 1 முதல் நிலை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் 856 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை, மொத்தமாக 2 லட்சத்து 57ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையம் வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. ஆதார் எண் இணைக்கப்பட்ட நுழைவுச் சீட்டு கட்டாயம், இடது பெருவிரல் ரேகையை விடைத்தாளில் பதிவு செய்தல் உள்ளிட்ட புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
முறைகேடுகள் நடக்காமல் இருக்க மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.