நிவர், புரெவி புயலால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு இடு பொருள் நிவாரணமாக, 600 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வருகிற 7ஆம் தேதி முதல், சுமார் 5 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும், முதலமைச்சர் கூறியுள்ளார். பயிர் பாதிப்பிற்கான நிவாரணம் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையில் மட்டுமே வழங்கப்படும் என்ற உச்சவரம்பு தளர்த்தப்பட்டு, பாதிப்பு முழுமைக்கும் நிவாரணம் வழங்க, உத்தரவிட்டுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகை, ஹெக்டேருக்கு, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.