பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்றவுடன் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடியாக சிறப்பு தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.