செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

உலக நன்மைக்காக ...அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் டும்... டும்... டும்... விருந்து வைத்து கொண்டாடிய கிராம மக்கள்.!

Dec 30, 2020 03:00:50 PM

கோயம்புத்தூரில் உலக நன்மைக்காக 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் கிராம மக்கள் வெகு விமர்சையாக திருமணம் செய்து வைத்து வழிபட்டனர்.

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களைத் தெய்வமாக வழிபட்டனர். அதன் வெளிப்பாடாகவே பண்டைய காலத்து மன்னர்கள் தங்கள் கோட்டையில் காவல் மரங்களை நட்டு வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. கோயில்களிலும் தல விருட்சமாக மரங்கள் இன்றளவும் வழிபடப்பட்டு வருகின்றன. அனைத்து மரங்களை விடவும் அரச மரத்துக்கு சிறப்பு அதிகம். மரங்களின் அரசன் என்று போற்றப்படுகிறது. இதில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. தேவலோகத்து மரம் என்றும் அரச மரத்தை ரிஷிகள் போற்றுவர்.

அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருப்பது, சிவசக்தியின் வெளிப்பாடு என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். அரசமரம் சிவபெருமான் என்றும். வேப்ப மரம் சக்தி எனப்படும் பார்வதி தேவி என்றும் பக்தர்களால் வணங்கப்படுகிறது. யாரும், அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் ஒன்றாக நட்டுவைக்க மாட்டார்கள். அவை, இயற்கையாகவே நதிக்கரைகள் மற்றும் சாந்நித்தியம் நிறைந்த இடங்களில் ஒன்றிணைந்து வளரும். சிவ சக்திக்கு இணையாகக் கருதப்படும் அரச மரம் - வேம்பு மரத்தடியில் முருகன், பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவது பாரம்பரியமாகும்.

இந்த சூழலில் தான் கோவை, துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் தானாகவே வளர்ந்த அரச மரம், வேப்ப மரத்துக்குத் திருமணம் செய்து வழிபட்டுள்ளனர் கிராம மக்கள்.

அப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமையான கருப்பராயன் கோயில் உள்ளது. கிராம மக்களின் குல தெய்வமாக வழிபடப்படும் கருப்பராயனுக்கு ஒவ்வொரு ஆண்டும் மக்கள் பூஜை செய்து விழா எடுப்பது வழக்கம். இந்தக் கோயிலில் 100 ஆண்டுகளுக்கு மேலான அரச மரமும், வேப்ப மரமும் உள்ளன. இவை தான் தல விருட்சமாக கிராம மக்களால் வழிபடப்படுகிறது.

இந்த நிலையில், உலக நன்மைக்காக வேப்பமரத்தை சக்தியாகவும், அரச மரத்தை சிவமாகவும் பாவித்து, இரண்டிற்கும் திருமணம் செய்து வைக்கக் கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்தத் திருமணத்துக்குக் கிராம மக்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அரச மரத்துக்குப் பட்டு வேட்டியும், வேப்ப மரத்துக்குப் பட்டுப் புடவையும் உடுத்தி, மலர் மாலை அணிவித்தனர்.

முறைப்படி, புரோகிதர்களை வரவழைத்து யாக குண்டம் வளர்த்து, வேத மந்திரங்கள் ஓதினர். மூன்று தம்பதிகளை வைத்து கன்னிகா தானம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கத்தால் ஆன தாலியினை மஞ்சல் கயிற்றில் கோர்த்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று, 3 பெண்கள் இணைந்து இரண்டு மரங்களை மஞ்சள் சுற்றிக் கட்டி மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டினர்.

இந்து பாரம்பரிய முறைப்படி அனைத்து திருமண சடங்குகளுடன் நடைபெற்ற இந்த புதுமையான திருமணத்திற்கு வந்திருந்த பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறு கொடுக்கப்பட்டது. மேலும் திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் திருமண விருந்தும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதுமையாக, சிவ - சக்தி அடையாளமான அரச மரம் மற்றும் வேப்ப மரத்துக்கு இடையே நடைபெற்ற திருமணத்தை அந்தப் பகுதி மக்கள் ஆச்சரியமாகவும், பக்தியுடனும் கண்டுகளித்தனர்..!


Advertisement
திருச்செந்தூர் முருகனுக்கு, சூரனை வதம் செய்த மறுநாள் திருக்கல்யாணம் நடத்தி வைப்பு
த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் 18 மாதங்கள் தொண்டர்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டுகோள்
சென்னையில் மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரின் உதிரிபாகம்
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கண்டிப்பாக இ-பாஸ் அவசியம்... உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுமண தம்பதிகளிடம் கட்டாய வசூலில் திருநங்கைகள் பணம் தர மறுத்தவர் மீது தாக்குதல்
கொடைக்கானல் அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கிய பொலிரோ ஜீப்.. பிரேக் பிடிக்காததால் மலையில் உருண்டதாக தகவல்..!
ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக உதவி கேட்ட நபர்.. ஏ.டி.எம் அட்டையைத் திருடிச் சென்ற திருடன்
தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் அமைகிறது சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்
பீரோ பட்டறை அதிபர் காரை மறித்து படுகொலை.. கொலைக் கைதிக்கு பண உதவி செய்ததால் ஆத்திரம் என தகவல்..!
நீர் வழி ஆக்கிரமிப்பு என்றால் உயர் நீதிமன்ற மதுரை கிளையை அகற்ற வேண்டும் - செல்லூர் ராஜூ

Advertisement
Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..


Advertisement