தமிழகத்தில் தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். அதிமுக ஆட்சியில் தான் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 78% ஆக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்கள் 52 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது என்ற அவர், அடுத்த 6 மாதங்களில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.