புரெவிப் புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கீடு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கணக்கீடு மேற்கொள்கின்றனர்.
திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் புரெவிப் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நாளை கணக்கீடு செய்கின்றனர்.
மத்திய அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் 9 பேர் கொண்ட மத்தியக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்திற்கான நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.