பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 2500 ரூபாய் மற்றும் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி, ரேசன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே நடைபெற்றிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜனவரி 4ம் தேதி திட்டம் தொடங்கப்படும் என அரசாணை வெளியிட்டுவிட்டு, டிசம்பர் 21-ஆம் தேதி இத்திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்திருப்பதாகவும், டோக்கனை அதிமுகவினரை வைத்து முதலமைச்சர் வழங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவினரை வைத்து டோக்கன் வழங்குவதை உடனே நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அ.தி.மு.க.வினர் மூலம் பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதை முதலமைச்சர் உடனடியாகத் தடுக்காவிட்டால், திமுக சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.