சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தில் பிற மாவட்ட பக்தர்களை அனுமதிக்கலாம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தில் பிற மாவட்ட பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை எனக் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் மகாதேவன், அனிதா சுமந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கொரோனா சூழலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், மத உணர்வைப் புண்படுத்தும் நோக்கமில்லை எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தரிசனத்துக்கு வெளிமாவட்டப் பக்தர்களையும் அனுமதிக்க உத்தரவிட்டனர். கொரோனா அறிகுறி இல்லாதோரை அனுமதிக்கலாம் என்றும், பரிசோதனைச் சான்று தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.