ஓசூர் அருகே உள்ள வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டிருப்பதால், அதையொட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓசூர் அருகே உள்ள மரங்கள் நிறைந்த சானமாவு வனப்பகுதிக்கு, ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து 50 க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் 3 நாள்களாக முகாமிட்டுள்ளன.
அந்த யானைகள் உணவு தேடி கிராம பகுதிக்கும், தோட்டங்கள் அமைந்த வேளாண் நிலங்களுக்கும் வர வாய்ப்பு இருப்பதால், கிராம மக்களையும், விவசாயிகளையும் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சானமாவு வனத்தையொட்டிய சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், நிதானமாகவும், எச்சரிக்கையாகவும் செல்ல வேண்டுமெனவும் வனத்துறை எச்சரித்துள்ளது.