பொங்கலை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட 2,500 ரூபாய் மற்றும் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணி, வீடு- வீடாக தொடங்கியுள்ளது.
அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அவற்றை ரேசன் கடைகளில் எப்போது, எந்நேரத்தில் பெற வேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன், வீடு- வீடாக விநியோகிக்கும் பணி சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கியுள்ளது.
இந்த டோக்கன் 30ம் தேதி வரை விநியோகிக்கப்படும் எனவும், அந்த டோக்கனை பெறாதோருக்கு ஜனவரி 13ம் தேதி ரேசன் கடையில் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.