தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அடுத்த மூன்று நாட்களுக்குப் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 28, 29 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்களில் இலேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
டிசம்பர் 27, 28 ஆகிய நாட்களில் தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.