கோவை அருகே கேரள தொழிலதிபரின் காரை வழிமறித்த 5 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 27 லட்ச ரூபாய் பணத்தோடு காரை பறித்து சென்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சலாம் என்பவர் தொழில் நிமித்தமாக கோவை வந்துவிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் மலப்புரத்திற்கு திரும்பியுள்ளார்.
பாலக்காடு சாலையில் நவக்கரை நந்தி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது மற்றோரு காரில் வந்து வழிமறித்த 5 மர்ம நபர்கள், ஓட்டுநர் மற்றும் அப்துல் சலாமை கத்தியை காட்டி மிரட்டி கீழே இறக்கி விட்டுவிட்டு, காரில் இருந்த 27 லட்ச ரூபாயுடன் காரை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.