இங்கிலாந்தில் இருந்து, தமிழ்நாடு திரும்பியவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், ஆரோவில், மரக்காணம், வானூர், காணை ஆகிய பகுதிகளை சேர்ந்த 11 பேர், சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, கபசுர குடிநீர் உள்ளிட்டவை வழங்கி, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கோயம்புத்தூரில் 3 பேரும், பொள்ளாச்சியில் ஒருவரும், தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் இருந்து வந்த, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேருக்கு, கொரோனா சோதனை நடைபெற்றதுடன், இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.