கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தில் பாக்டீரியா கலந்த குடிநீரை அருந்தியதால் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் 50க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அங்கு கடந்த ஒரு வாரமாகவே ஏராளாமானோர் வாந்தி, மயக்கம் என அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட சுகாதாரத்துறையினர், கிராமத்தினர் அருந்தும் குடிநீரை ஆய்வு செய்தனர். அதில் அதிகளவிலான பாக்டீரியாக்கள் கலந்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. கு
டிநீர் போர்வெல் அமைந்திருக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்றதாகவும் அண்மையில் பெய்த மழையில் கழிவுநீர் குடிநீரோடு கலந்துவிட்டதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர்.
குடிநீரை ஒரு வாரத்துக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.