இங்கிலாந்தில் இருந்து வேகமாக பரவும் புதிய வகை கொரோனா தொற்று குறித்து வருகிற 28ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் வரும் 28ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாகவும், அப்போது கொரோனா பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.