செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

'ஸ்கிரிப்ட்ட மாத்துங்கப்பா!'- சோனு சூட்டை அடிக்க தயங்கிய சிரஞ்சீவி!

Dec 23, 2020 11:13:24 AM

தெலங்கானா மக்கள், நடிகர் சோனு சூட்டுவுக்கு கோயில் கட்டி வைத்துள்ள நிலையில், அவரை அடிப்பது போல காட்சியில் நடித்தால் சரியாக இருக்காது என்று கூறி தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி காட்சிகளை மாற்றி அமைத்துள்ளார்.

நடிகர் சோனு சூட் கள்ளழகர் என்ற தமிழ்படத்தில் அறிமுகமாகி தென்னிந்திய படங்கள், பாலிவுட் படங்களிலும் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். தபாங், ஜோதா அக்பர் , சிம்பா போன்ற படங்களிலும் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், கொரோனா காலத்தில் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து சோனு சூட் நிஜ ஹீரோவாக மாறி விட்டார். புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல உதவியது முதல் சிக்னல் கிடைக்காத கிராமங்களுக்கு செல்போன் டவர் அமைத்து கொடுத்தது வரை சோனு சூட் செய்த மக்கள் சேவை அளப்பறியது. எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் பல்வேறு நிறுவனங்கள் உதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆதரவுடன் சோனு சூட் மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால், தெற்காசியாவின் சிறந்த ஆளுமையாகவும் சோனு சூட் தேர்வு செய்யப்பட்டார். தெலங்கனா மக்கள் ஒரு படி மேலே போய், சோனு சூட்டுவுக்கு கோயிலே கட்டி விட்டனர்.

இந்த நிலையில், வீ த வூமன் (we the woman) என்ற நிகழ்ச்சிக்காக காணோலியில் பேசிய சோனு சூட், '' 2020 ஆம் ஆண்டு உலகத்தை மட்டுமல்ல தன்னையும் மாற்றி விட்டதாக மனம் திறந்து கூறியுள்ளார். மேலும், தன் தனிப்பட்ட வாழ்க்கை மாறி விட்டதாகவும் நல்ல கதையம்சத்துடன் கூடி 5,6 ஸ்கிரிப்ட்டுகளின் தான் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் மனம் நெகிழ்ந்து சோனு சூட் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கெனவே நடித்த படங்களில் கூட சோனு சூட்டுவுக்காக ஸ்கிரிப்ட்டுகளும் மாற்றப்பட்டு வருகின்றனவாம்.

கெரோனாவுக்கு முன் வில்லனாக வலம் வந்த சோனு சூட் இப்போது மக்கள் மத்தியில் நல்ல இமேஜ் உள்ளதால், படத்தின் ஹீரோக்கள் அவரை அடிக்க தயங்குகின்றனராம். மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் உள்ள சோனு சூட்டை தாங்கள் அடிப்பது போல நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த காட்சியை வெறுக்கவும் செய்வார்கள் என்று சினிமா ஹீரோக்கள் கூறுகின்றர். அண்மையில், நடிகர் சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்படத்தின் சண்டை காட்சியில் நடிகர் சிரஞ்சீவி வில்லனாக நடித்த சோனு சூட்டை காலால் உதைப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த காட்சியில் நடித்தால் மக்கள் என்னை சபித்து விடுவார்கள் .... என்னால் முடியாதப்பா என்று கூறி சிரஞ்சீவி கூறி விட்டார். பின்னர், காட்சிகள் சற்று மாற்றி படமாக்கப்பட்டுள்ளது.

அதே போல மற்றோரு தெலுங்கு படத்தில் சோனு சூட் சம்பந்தப்பட்ட காட்சிகள் கொரோனா காலத்துக்கு முன்னரே எடுக்கப்பட்டு விட்டன. கொரோனா காலத்தில் சோனு சூட்டுவின் இமேஜ் மாறி விட்டதால், அவர் சம்பந்தப்பட்ட ஸ்கிரிப்ட்டுகளை அப்படியே மாற்றியமைத்து மீண்டும் சூட்டிங் செய்யப்பட்டுள்ளது.


Advertisement
தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..
மூடப்படாத குடிநீர் பைப் பள்ளம் - விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..
மதுரையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் கைவரிசை - சி.சி.டி.வி காட்சி வெளியீடு
புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு - திருமா
விசாரணைக்கு அழைத்த நபர் வர மறுத்ததால் அடித்து,உதைத்த காவலர் இடமாற்றம் ..
8 செ.மீ மழையை தாங்கும் வகையில் வடிகால் அமைப்பு உள்ளன - அமைச்சர் கே.என்.நேரு
பழனி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகளை மருத்துவமனையில் அனுமதி..
பள்ளி மாணவியை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்.!
திருச்சியில் 5 பள்ளிகளுக்கு 3ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்..!

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement