தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் தெற்கு பகுதி, அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களிலும், வட தமிழகத்திலும் வறண்ட வானிலையே காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.