மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மைசூரு கல்வெட்டியியல் மையத்தில் வைக்கப்பட்டுள்ள தொன்மையான சின்னங்கள், கல்வெட்டுகள், முறையாகப் பராமரிக்கப்படாமல் சேதமடைய வாய்ப்புள்ளதாகவும், அவற்றை தமிழகம் கொண்டுவர வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
கல்வெட்டுகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படுவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ராஜவேலு, சாந்தலிங்கம் உட்பட 5 பேர் கொண்ட குழுவை அமைத்து, மைசூரு சென்று, தமிழ் கல்வெட்டுக்கள் முறையாக பாதுகாக்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.