தமிழ்நாட்டில், புதிதாக 1,071 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் 1,157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பால் 12 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் 91 வயது மூதாட்டி ஒருவர், கொரோனாவுக்கு பலியானார். அதேநேரம், கொரோனா உயிரிழப்பு இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 30 ஆக பதிவாகி இருந்தது.
சென்னையில் 306 பேருக்கு, புதிதாக, கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 4 - வது நாளாக கொரோனாவுக்கு ஒருவர் கூட பாதிக்கப்பட வில்லை.
11 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி இருந்தது. தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 495 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.