தென்காசி மாவட்டம் கடையம் அருகே டிராக்டர் ஓட்டிய 12 வயது சிறுவன்.
கடையம் அருகே மயிலானூர் பகுதியை சேர்ந்த அந்த சிறுவன் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்த சிறுவன் கடந்த 3 மாதங்களாக டிராக்டர் ஓட்ட பழகி, தந்தைக்கு உதவியாக அவர்கள் விளைநிலத்தில டிராக்டர் மூலம் உழவு பணியை மேற்கொண்டு வருகிறான்.
இருப்பினும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம் என்றும், இதை பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.