விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அரசு மினி கிளினிக் திறப்பு விழாவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பலூன்களை உடைத்து மகிழ்ச்சியடைந்தார்.
சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட சுக்கிரவார்பட்டி, வேண்டுராயபுரம், பள்ளபட்டி உள்ளிட்ட இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.
அய்யனார் காலனியில் நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அங்கு தோரணமாக தொங்கவிடப்பட்டிருந்த பலூன்களை கத்தரியால் உடைத்த பின்னர், கிளினிக்கை திறந்து வைத்தார்.