டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாநிலை போராட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நிறைவாக பேசிய ஸ்டாலின், இந்த போராட்டம் நடத்தியதற்காக எந்த வழக்கு போட்டாலும் எதிர்கொள்ள தயார் என்றார். விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.