மருத்துவ படிப்பில், உள்ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் கட்ட கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதனை முன்தேதியிட்டு அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது.
2ஆம் கட்ட கலந்தாய்வில், அரசு பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் 26 இடங்களில், ஏற்கனவே சீட் கிடைத்தும் கல்வி கட்டணம் காரணமாக சேர இயலாத நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.