அரசுப் பள்ளிகளில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள 484 புதிய பணியிடங்களைப் பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான இளநிலை உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளப் போதிய ஆட்கள் இல்லாததால், ஆசிரியர்களே அவற்றைச் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் அரசுப் பள்ளிகளுக்கு 389 இளநிலை உதவியாளர் பணியிடங்களும், 95 பதிவறை எழுத்தர் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்பட்டு, ஊதியம் வழங்க ஏதுவாக 13 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
484 பணியிடங்களுக்கும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் தகுதியானோர் நியமிக்கப்பட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.