அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மீது நடவடிக்கை கோரிய மனு மீதான விசாரணையின்போது, பொது சொத்து பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இது சரியான தருணம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போராட்டத்தில் ரயில் மீது கல்வீசி தாக்கியது தொடர்பாக காவல்துறை வழக்கு மட்டுமே பதிந்துள்ளதாகவும், கைது ஏதும் செய்யவில்லை என மனுதாரர் வாதிட்டார்.
அதற்கான அதிகாரம் போலீசுக்கு உள்ளதோடு, பொது சொத்து பாதுகாப்பு சட்டமும் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இது சரியான தருணம் என்றனர்.
ரயில் மீது கல்லெறி சம்பவம் நடைபெற்றுள்ளதால், தெற்கு ரயில்வே பொது மேலாளரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.