ஆந்திர மாநிலம் புத்தூர் சுங்கச்சாவடி அருகே செம்மரம் வெட்டுவதற்காக லாரியில் வந்த 25 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், புத்தூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்குகிடமாக வந்த லாரியில் 25 பேர் செம்மரம் வெட்டுவதற்காக வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், தப்பிச் சென்ற 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.