தமிழ்நாடு மின்சார வாரியம் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என்றும், அதுகுறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்த அமைச்சர், 50 விழுக்காட்டிற்கு மேல், காலி பணியிடங்கள் உள்ள மின்வாரிய துணை மண்டலங்களில், பணிகள் தொய்வின்றி நடைபெறவும், 24 மணி நேரமும் தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்யவும் மட்டுமே, அவுட்சோர்சிங் எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளதாகத் கூறியுள்ளார்.
அதுவும், 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில், தற்காலிக ஏற்பாடு என்றும், அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.