சொத்து வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேர் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் ஏற்கனவே 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி, சுதாகரன் மனு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றதாகவும், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சுதாகரன் எந்நேரத்திலும் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.