அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 2 இடங்களை அதிகரிக்க உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மருத்துவ ஆணையம் விளக்கமளித்துள்ளது.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் கடலூர் மாணவிகள் 2 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடம் உருவாக்க கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், ஆதலால் தமிழக அரசு அந்நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்தது.
தமிழக அரசு தரப்பில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கிடைக்கும் 26 இடங்கள் கொண்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60 அரசு பள்ளி மாணவர்களுக்கும் மறு கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.