அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிடக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து மார்ச் 29ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் பழனி என்பவர் தொடுத்த மனுவில், தொன்மையான தமிழ் மொழி அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
மேலும் தமிழில் கடிதங்கள் அனுப்ப தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி உத்தரவிட்டிருப்பதையும், சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் தமிழில் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 29ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.