சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
15 நாள் இடைவெளியில் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகமாக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் குறிப்பாக, இல்லத்தரசிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பேரிடர் சூழலில் விலை உயர்வு நெருக்கடிகளை மக்கள் மீது திணிக்காமல் இருப்பதே ஆட்சியாளர்களுக்கு உள்ள கடமையும் பொறுப்புமாகும் என்றும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். விலை உயர்வை திரும்பப் பெற்று, டிசம்பருக்கு முந்தைய விலையிலேயே வீடுகளுக்கு சிலிண்டரை விநியோகிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.